ரியோ ராஜ் நடிக்கும் யுவனின் 'ஸ்வீட்ஹார்ட்' புரோமோ வீடியோ
|ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். தற்பொழுது விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பது மட்டுமல்லாமல் அவர் படங்களை தயாரித்தும் வருகிறார்.ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'ஹை ஆன் லவ்' என்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த இரண்டு படமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி இயக்கத்தில் 'மாமனிதன்' திரைப்படத்தை தயாரித்தார். இத்திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது.
தற்பொழுது யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் அவர்களது 4 - வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தின் பெயர் அறிவிப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி , ரெஞ்சி பானிக்கர் , அருணாச்சலம் பா, துளசி, சுரேஷ் சக்கரவர்த்தி நடிக்கவுள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கவுள்ளார்.
படத்தின் பெயர் அறிவிப்பு புரோமோ வீடியோ மிகவும் நகைச்சுவை பாணியில் இருக்கின்றது. யுவன் இப்படத்தை தயாரித்து படத்திற்கு இசை அமைக்க உள்ளார். படத்திற்கு 'ஸ்வீட்ஹார்ட்' என்று பெயரிட்டுள்ளனர். இந்த புரோமோ வீடியோ காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.