தென்கொரிய இளம் நடிகை வீட்டில் மர்ம மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி
|தென்கொரியாவை சேர்ந்த இளம் நடிகை 26 வயதில் அவரது வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்து உள்ளார்.
சியோல்,
தென்கொரியாவை சேர்ந்த இளம் நடிகை ஜங் சே-யல் (வயது 26). 2016-ம் ஆண்டில் டெவில்ஸ் ரன்வே என்ற ரியாலிட்டி தொடர்களில் மாடலாக அறிமுகம் ஆன அவர், பின்பு ஜாம்பி டிடெக்டிவ் என்ற நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்தது அவரை ரசிகர்களிடையே பிரபலமடைய செய்தது.
காமெடி தொடர்களிலும் நடித்து உள்ள அவர், 2018-ம் ஆண்டு வெளியான டீப் என்ற படத்திலும் நடித்து உள்ளார். இந்நிலையில் வெடிங் இம்பாசிபிள் என்ற தொடரில் முன்னணி வேடத்தில் அவர் நடித்து கொண்டு இருந்தபோது, அவரது ரசிகர்களுக்கு சோக செய்தி வந்தது.
அவர், வீட்டில் மர்ம மரணம் அடைந்து கிடந்து உள்ளார். இதற்கான பின்னணி என்னவென்று தெரியவில்லை. இதனை அவரது எஸ் என்ற மேலாண் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
அவரது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு ஏற்ப, இறுதி சடங்குகள் தனிப்பட்ட முறையில் நடைபெறும். அவருக்காக இறைவனிடம் வேண்டி கொள்வீர்கள் என நம்புகிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என அதுபற்றிய அவரது நிர்வாகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் கடைசியாக சமூக ஊடகத்தில் அவர் ஹெட்போன் அணிந்து தோன்றும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வருகின்றனர்.