< Back
சினிமா செய்திகள்
இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
சினிமா செய்திகள்

இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்

தினத்தந்தி
|
2 May 2024 12:14 PM IST

இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்.

சென்னை,

இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலாமானார். அவருக்கு வயது 28. கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரவீன்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 6 மணியளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

இராக்கதன், மேதகு, கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு பிரவீன்குமார் இசையமைத்துள்ளார். இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்