'கோட்' படத்தை பார்க்கும் போது ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை விசில் அடிப்பீர்கள்- நடிகர் பிரேம்ஜி
|‘கோட்’ படத்தில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன என்று நடிகர் பிரேம்ஜி பேசியுள்ளார்.
சென்னை,
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 'கோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் 4-வது பாடலான 'மட்ட' பாடல் வெளியானது. இப்பாடல் இணையத்தில் வைரலானது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி உள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் பிரேம்ஜி, "கோட் படத்தை பலமுறை பார்த்துவிட்டேன். நீங்கள் எதிர்பாராத விசயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறையும் விசில் அடிப்பீர்கள். தமிழ் சினிமாவில் இதற்கு முன் இப்படியான ஆச்சரியங்களைப் பார்த்திருக்க மாட்டீர்கள். அறிமுக காட்சியே அசத்தலாக இருக்கும். படத்தைப் பார்த்து முடித்ததும் என் அண்ணனிடம் கோட் உலகளவில் ரூ. 1500 கோடி வரை வசூலிக்கும் என சொன்னேன். பார்ப்போம்." எனக் கூறியுள்ளார். பிரேம்ஜியின் பேச்சைக் கேட்ட விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதாக உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரளத்தில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.