எங்க காதலோட ஓசை உங்களுக்கும் கேக்கும் - தமிழில் பதிவிட்ட ஆலியா பட்
|இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிரமாஸ்திரா.
இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஆலியா பட், ரன்பீர் கபூர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பிரமாஸ்திரா'. இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் தீத்திரியாய் மூலமா என்ற பாடலை ஆலியா பட் பகிந்துள்ளார். இது குறித்து தமிழில் பதிவிட்டுள்ள ஆலியா பட், "எங்க காதலோட ஓசை இப்போ உங்களுக்கும் கேக்கும் தீத்திரியாய் மூலமா!" என்று பதிவிட்டுள்ளார். மதன் கார்க்கி வரிகளில் சித்ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.