நாடாளுமன்றத்தில் செங்கோல்...! தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர்.. இயக்குனர் சீனு ராமசாமி பாராட்டு
|புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.
இந்தியர்களுக்கு கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தபோது அதிகார பரிமாற்றம் நடைபெற்றதை குறிக்கும் வகையில் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். சபாநாயகரின் இருக்கைக்கு அருகே இந்த செங்கோல் நிறுவப்பட்டது.
இந்நிலையில், புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இன்று இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம் செங்கோலை போற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர் பெரிய விசயம் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர்.
— Seenu Ramasamy (@seenuramasamy) May 27, 2023
இன்று இந்தியாவின் புதிய
பாராளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம்
செங்கோலை
போற்றும்
பிரதமர் @narendramodi
அவர்களே
உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர்
பெரிய விசயம்