< Back
சினிமா செய்திகள்
படக்குழுவினரை கண்டித்த யோகிபாபு
சினிமா செய்திகள்

படக்குழுவினரை கண்டித்த யோகிபாபு

தினத்தந்தி
|
16 July 2022 8:35 AM IST

‘தாதா’ படத்தின் போஸ்டர் குறித்து படக்குழுவினரை கண்டித்து யோகிபாபு தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வளர்ந்துள்ள யோகிபாபு, தற்போது அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கூடுதல் சம்பளமும் வாங்குகிறார். யோகிபாபு நடித்து சமீபத்தில் பன்னிகுட்டி படம் வெளியானது.

இந்த நிலையில் நிதின் சத்யா கதாநாயகனாக நடிக்கும் 'தாதா' படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் நிதின் சத்யா படத்துக்கு பதிலாக யோகிபாபு துப்பாக்கியுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை வைத்து படக்குழுவினர் விளம்பரம் செய்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் யோகிபாபு வெளியிட்டுள்ள பதிவில், ''இந்த படத்தில் நிதின் சத்யா ஹீரோவாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்து இருக்கிறேன். எனவே தயவு செய்து விளம்பரத்துக்காக இதுபோல் செய்யாதீர்கள். நன்றி" என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த பதிவு அனைவரையும் கவர்ந்துள்ளது. இதற்கு பதில் அளித்து நிதின் சத்யா வெளியிட்டுள்ள பதிவில், ''ஒரு நண்பனை விட்டுக்கொடுக்காமல், ரசிகர்களையும் விட்டுக்கொடுக்காமல், அந்த மனதுதான் யோகிபாபு" என்று பாராட்டி உள்ளார்.

மேலும் செய்திகள்