< Back
சினிமா செய்திகள்
மீண்டும் நாயகனாக நடிக்கும் யோகிபாபு
சினிமா செய்திகள்

மீண்டும் நாயகனாக நடிக்கும் யோகிபாபு

தினத்தந்தி
|
19 July 2023 10:16 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபுவுக்கு சமீப காலமாக கதாநாயகன் வாய்ப்புகளும் குவிகின்றன. ஏற்கனவே பன்னி குட்டி, பொம்மை நாயகி, யானை முகத்தான் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். முன்னணி நடிகர்கள் படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மீண்டும் புதிய படமொன்றில் கதாநாயகனாக யோகிபாபு நடிக்கிறார். இந்த படத்தை சிம்புதேவன் டைரக்டு செய்கிறார். படத்துக்கு 'போட்' என்று பெயர் வைத்துள்ளனர். பிரபா பிரேம்குமார் தயாரிக்கிறார். சிம்புதேவன் ஏற்கனவே இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305-ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூணு களவானியும். புலி, கசட தபற உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.

போட் படம் முழுக்க கடலிலேயே படமாக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்