< Back
சினிமா செய்திகள்
யோகி பாபு நடிக்கும் வானவன் படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு
சினிமா செய்திகள்

யோகி பாபு நடிக்கும் 'வானவன்' படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
23 July 2023 3:51 PM IST

யோகி பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வானவன்’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பாராட்டைப் பெற்று வருகிறது.

அடுத்ததாக 'ஜெயிலர்', 'அயலான்', 'எல்ஜிஎம்', 'கங்குவா' உள்ளிட்ட படங்களில் யோகி பாபு நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சஜின் கே சுரேந்தர் இயக்கும் இப்படத்துக்கு 'வானவன்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் வீடியோவை இயக்குநர் மடோன் அஸ்வின் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். படத்தில் காளிவெங்கட், ரமேஷ் திலக், லக்ஷ்மி ப்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்போது இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



மேலும் செய்திகள்