< Back
சினிமா செய்திகள்
வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்த நடிகர் யோகி பாபு...!
சினிமா செய்திகள்

வாரிசு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோவை பகிர்ந்த நடிகர் யோகி பாபு...!

தினத்தந்தி
|
28 Jan 2023 5:54 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் கடந்த 11-ஆம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் விஜய்யுடன் எடுத்த வீடியோவை நடிகர் யோகி பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


மேலும் செய்திகள்