< Back
சினிமா செய்திகள்
யோகிபாபு, லட்சுமி மேனன் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

யோகிபாபு, லட்சுமி மேனன் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
8 Dec 2022 4:59 PM IST

யோகிபாபு, லட்சுமி மேனன் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'மலை'. இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனன் யோகிபாபுவுடன் இணைந்து நடிக்கிறார்.

லெமன் லீப் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

லட்சுமி மேனன் மற்றும் யோகிபாபு இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்