< Back
சினிமா செய்திகள்
யோகி பாபு நடிக்கும்   கான்ஸ்டபிள் நந்தன்
சினிமா செய்திகள்

யோகி பாபு நடிக்கும் 'கான்ஸ்டபிள் நந்தன்'

தினத்தந்தி
|
9 July 2024 5:28 PM IST

தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபுவின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் நகைசுவை கதாபாத்திரங்களில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற லொள்ளு சபா நிகழ்ச்சியில் அறிமுகமாகி, அதன் பின்னர் சின்ன சின்ன காமெடி காட்சிகளில் நடித்து வந்த யோகி பாபு தற்போது நகைச்சுவையில் முன்னணி நடிகராக திகழ்கிறார்.


இவரது நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, மண்டேலா, கூர்கா, மாவீரன் மற்றும் ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் அட்லீயின் இயக்கத்தில் வெளியான ஜவான் படத்திலும் அறிமுகமாகி தனது இருப்பை பாலிவுட்டிலும் உறுதி செய்தார் யோகி பாபு.


தற்போது தனது அடுத்த படத்தின் படிப்பிடிப்பை தொடங்கியுள்ளார். அறிமுக இயக்குனர் பூபால நடேசன் இந்தப்படத்தை இயக்குகிறார். இதில் யோகி பாபு போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு 'கான்ஸ்டபிள் நந்தன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. காவல்துறையில் அதிக கருணையுடன் ஒருவர் இருந்தால் என்ன நடக்கும் என்பதுதான் படம்.

இப்படத்தை சங்கர் பிக்சர்ஸ் சார்பில் டி. சங்கர் தயாரிக்க உள்ளார். சுந்தர் சி, சசிகுமார் மற்றும் மு.களங்கியம் ஆகியோரின் உதவி இயக்குனராக பூபால நடேசன் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்