< Back
சினிமா செய்திகள்
பக்தி படத்தில் யோகிபாபு
சினிமா செய்திகள்

பக்தி படத்தில் யோகிபாபு

தினத்தந்தி
|
27 Jan 2023 2:04 PM IST

சபரிமலை ஐயப்பன் பக்தி படத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு 'சன்னிதானம் பி.ஓ' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் பிரமோத் ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜீவ் வைத்யா டைரக்டு செய்கிறார். மதுசூதன் ராவ், ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தை சபரிமலை சன்னிதானத்தில் டைரக்டர் விக்னேஷ் சிவன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். சபரிமலை பின்னணியில் உருவாகிறது. சபரிமலை சன்னிதானம் மற்றும் அங்கு பணிபுரியும் டோலி தூக் கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள தபால் நிலையம் ஆகிவற்றை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் தயாராகிறது. ராஜேஷ் மோகன் திரைக்கதை எழுதி உள்ளார். ஒளிப்பதிவு: வினோத் பாரதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.

மேலும் செய்திகள்