தெலுங்கு படத்தில் யோகிபாபு
|யோகிபாபுவுக்கு தெலுங்கு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.
தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்துள்ள யோகிபாபு கை நிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறார். கதாநாயகனாகவும் நடிக்கிறார். தற்போது இந்திக்கும் போய் இருக்கிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்தி படத்தில் யோகிபாபுவும் இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்று தனது காட்சிகளை நடித்துக்கொடுத்துவிட்டு திரும்பி உள்ளார். இந்த நிலையில் யோகிபாபுவுக்கு தெலுங்கு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. பிரபாஸ் தற்போது பெயரிடப்படாத தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து டைரக்டராகவும் யோகிபாபு முயற்சி செய்து வருகிறார். தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுத்து படமாக எடுக்க அவர் முடிவு செய்துள்ளார்.