< Back
சினிமா செய்திகள்
பாட்டி கெட்டப்பில் யோகி பாபு - வைரலாகும் டைட்டில் டீசர்
சினிமா செய்திகள்

பாட்டி கெட்டப்பில் யோகி பாபு - வைரலாகும் டைட்டில் டீசர்

தினத்தந்தி
|
16 Jan 2023 9:01 PM IST

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு தற்போது இயக்குனர் லதா ஆர் மணியரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 'மெஹந்தி சர்க்கஸ்' மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'மிஸ் மேகி' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆங்கிலோ இந்தியன் பாட்டி கெட்டப்பில் வித்தியாசமான லுக்கில் யோகி பாபு இடம் பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்