< Back
சினிமா செய்திகள்
யோகி பாபு, ஓவியா நடித்துள்ள பூமர் அங்கிள் படத்தின் டிரைலர் வெளியானது..!
சினிமா செய்திகள்

யோகி பாபு, ஓவியா நடித்துள்ள 'பூமர் அங்கிள்' படத்தின் டிரைலர் வெளியானது..!

தினத்தந்தி
|
28 Nov 2022 10:08 PM IST

யோகி பாபு, ஓவியா நடித்துள்ள 'பூமர் அங்கிள்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

யோகி பாபு, ரோபோ சங்கர், ஓவியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் 'பூமர் அங்கிள்'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வதீஸ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பாலா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதலில் இந்த படத்திற்கு 'கான்ட்ராக்டர் நேசமணி' என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் 'பூமர் அங்கிள்' என பெயர் மாற்றப்பட்டது.

அங்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா படத்தொகுப்பு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்