< Back
சினிமா செய்திகள்
ரீ-ரிலீசான கே.ஜி.எப்: சாப்டர்-1
சினிமா செய்திகள்

ரீ-ரிலீசான கே.ஜி.எப்: சாப்டர்-1

தினத்தந்தி
|
21 Jun 2024 4:36 PM IST

கே.ஜி.எப்: சாப்டர்-1 திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவான கே.ஜி.எப்: சாப்டர்-1 திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. இதில் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் யஷ் நடித்திருந்தார். மேலும் சஞ்சய் தத், ரவீனா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், 250 கோடி ரூபாய் வரை வசூலித்ததோடு, கன்னட திரையுலகில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து கே.ஜி.எப்: சாப்டர்-2 திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனைப்படைத்தது.

இந்நிலையில், கே.ஜி.எப்: சாப்டர்-1 திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து படக்குழு நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், 'தெலுங்கு மாநிலங்களில் ஜூன் 21-ல் (இன்று) கே.ஜி.எப்: சாப்டர்-1 திரைப்படம் மீண்டும் வெளியாகும்,' இவ்வாறு தெரிவித்தது. அதன்படி இத்திரைப்படம் திரையரங்குகளில் இன்று ரீ-ரிலீசாகியுள்ளது.

மேலும் செய்திகள்