< Back
சினிமா செய்திகள்
பேயாக நடிக்கும் யாஷிகா ஆனந்த்
சினிமா செய்திகள்

பேயாக நடிக்கும் யாஷிகா ஆனந்த்

தினத்தந்தி
|
16 April 2023 6:32 AM IST

தமிழில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வகை படங்கள் தயாரிப்பாளர்களை ஏமாற்றாமல் நல்ல லாபம் பார்த்து கொடுக்கின்றன. இதனாலேயே சுந்தர்.சி தனது அரண்மனை பேய் படத்தின் 4-ம் பாகத்தையும் எடுத்து வருகிறார். லாரன்சின் காஞ்சனா பேய் படத்தின் 4-ம் பாகத்தை எடுக்கும் திட்டமும் உள்ளது.

நிறைய பேய் படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. இந்த நிலையில் யாஷிகா ஆனந்தும் தற்போது பேய் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சைத்ரா என்று பெயர் வைத்துள்ளனர். இதில் யாஷிகா பேயாகவே நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை புது டைரக்டர் ஜெனித்குமார் டைரக்டு செய்கிறார். இதில் அவிதேஜ், சக்தி மகேந்திரன், பூஜா, ரமணன், கண்ணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

24 மணிநேரத்தில் நடக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதன் டிரெய்லரை தற்போது வெளியிட்டு உள்ளனர்.யாஷிகா ஆனந்த் ஏற்கனவே தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிலையில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். சிகிச்சைக்கு பிறகும் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். தற்போது உடல்நலம் முழுமையாக தேறிய நிலையில் மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார்.

மேலும் செய்திகள்