கவர்ச்சியில் கலக்கும் யாஷிகா ஆனந்த்
|பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமூக வளையதள பக்கங்களிலும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர், யாஷிகா ஆனந்த். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன.
இந்தநிலையில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று தற்போது பழைய நிலைக்குத் திரும்பி இருக்கிறார். மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நேரத்தில் அவர் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாட மட்டுமே செய்தார். பெரிதாக படங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.
தற்போது யாஷிகா தனது கலக்கல் கவர்ச்சி புகைப்படங்களை மீண்டும் வெளியிட தொடங்கி இருக்கிறார். இதனால் ரசிகர்களும் குஷியாகி இருக்கிறார்கள். 'இப்போதுதான் கண்கள் பளிச்சென தெரிகிறது', என்று சந்தோஷத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மீண்டும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைவதால் யாஷிகா உற்சாகம் அடைந்திருக்கிறார்.