< Back
சினிமா செய்திகள்
Yash to bring 1950s and 1970s eras to Toxic: A Fairy Tale for Grown-ups
சினிமா செய்திகள்

'டாக்சிக்' - வெளியான புதிய அப்டேட்

தினத்தந்தி
|
2 July 2024 11:59 AM IST

'டாக்சிக்' படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

சென்னை,

நடிகர் யாஷ் தற்போது தனது 19-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'டாக்சிக்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இப்படமானது 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த படத்தில் நடிகை நயன்தாரா, கியாரா அத்வானி, சுருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதில், நடிகர் யாஷ், ஸ்டைலிசான டானாக நடிக்கிறார் என்று தகவல் பரவியுள்ளது.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் 1950-1970 காலகட்டத்தை மையமாக கொண்டு போதைப்பொருளுக்கு எதிரான பின்னணியில் உருவாகும் ஆக்சன் படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்