'கே.ஜி.எப் 6-ல் யாஷ் மாற்றம்
|கே.ஜி.எப் படத்தின் 5 பாகங்கள் வரை யாஷ் நடிப்பார் என்றும், கே.ஜி.எப் 6-வது பாகத்தில் யாஷ் மாற்றப்படுவார் என்றும் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்து உள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்து 2018-ல் வெளியான 'கே.ஜி.எப்' கன்னட படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வந்தது. உலகம் முழுவதும் கே.ஜி.எப் இரண்டாம் பாகம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதையடுத்து கே.ஜி.எப் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தயாராக உள்ளது. கே.ஜி.எப் படத்தின் 5 பாகங்கள் வரை யாஷ் நடிப்பார் என்றும், கே.ஜி.எப் 6-வது பாகத்தில் யாஷ் மாற்றப்படுவார் என்றும் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்து உள்ளார். கே.ஜி.எப் 6-வது பாகத்தில் யாஷ்க்கு பதிலாக ராக்கிபாய் கதாபாத்திரத்தில் வேறு கதாநாயகன் நடிப்பார் என்றும் அவர் கூறினார்.
கே.ஜி.எப் படத்தின் மூன்றாம் பாகம் படப்பிடிப்பு 2025-ம் ஆண்டு தொடங்கும் என்று அறிவித்து உள்ளனர்.