< Back
சினிமா செய்திகள்
விளம்பரத்தால் உயர துடிக்கும் நடிகர்களை சாடிய யாமி கவுதம்
சினிமா செய்திகள்

விளம்பரத்தால் உயர துடிக்கும் நடிகர்களை சாடிய யாமி கவுதம்

தினத்தந்தி
|
15 Aug 2023 1:29 PM IST

தமிழில் கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான யாமி கவுதம் தொடர்ந்து ஜெய்யுடன் 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்திலும் நடித்து இருந்தார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

யாமி கவுதம் அளித்துள்ள பேட்டியில், "நல்ல கதைகள் மீது கவனம் செலுத்தாமல் சினிமாவை சந்தைப்படுத்தலில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் நடிகர்- நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைகள் முழுமையாக வெளியே வர முடியாமல் உள்ளது.

இந்தியில் இந்த மார்க்கெட்டிங் கலாசாரம் அதிகமாகிவிட்டது. சினிமாவில் சிலர் ஒரு படத்திலேயே சாதிப்பார்கள். சிலர் எத்தனையோ ஆண்டுகள் உழைத்து பெயரும் புகழும் பெறுவார்கள்.

இன்னும் சிலர் மட்டும் விளம்பரம் மூலம் வெற்றியை அடைய துடிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் சினிமாவில் அதிக காலம் நீடிக்க முடியாது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தாமல் கேவலம் மார்க்கெட்டிங் மூலம் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகி விட்டது.

நான் விளம்பர கலாசாரத்துக்கு தொலைவிலேயே இருப்பேன். திறமை மீது நம்பிக்கை வைத்து கஷ்டப்பட்டு உழைத்தால் வெற்றி தானாகவே வரும்'' என்றார்.

மேலும் செய்திகள்