வாலிபர்களை மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக பெண் டைரக்டர் கைது
|கொலை மிரட்டல் விடுத்ததாக திரைப்பட பெண் டைரக்டர் லட்சுமி தீப்தாவை அருவிக்கரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
யெஸ்மா சீரிஸ் எனப்படும் வயது வந்தோருக்கான திரைப்படங்களுக்கு மட்டும் மலையாளத்தில் ஓடிடி தளம் ஒன்றி வந்துள்ளது. ஆர்யானந்தா கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இதன் தயாரிப்பு நிறுவனம் ஆகும்.இந்த ஓடிடி தளத்தின் மாதச் சந்தா ரூ.111. மூன்று மாதங்களுக்கு ரூ.333 மற்றும் ஆறு மாதங்களுக்கு ரூ.555.
இதில் நான்சி மற்றும் செல் இரண்டு வெப் சீரிஸ்கள் முதலில் பார்வையாளர்களுக்கு வெளியிடப்பட்டது . இந்த 2 சீரிஸ்களையும் லட்சுமி தீப்தா இயக்கியுள்ளார். நான்சியில் அஞ்சனா ஏஞ்சலினா, ஜெய்கிருஷ்ணன் மற்றும் சஜ்னா சாஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
செலினின் திரைக்கதை, வசனம் லட்சுமி தீப்தா. இதில் மரியா, ராஜி, சவுமியா, சுபியான் மற்றும் ரம்யா ஆகியோர் நடித்து உள்ளனர்.லட்சுமி தீப்தா. இவர் மலையாள சினிமா இயக்குநராக உள்ளார். இவர் மலையாளத்தில் நான்ஸி, ஸெலின்றெ டியூசன் கிளாஸ், பால் பாயாசம் போன்ற 18+ வெப் சீரிஸ்களை இயக்கி உள்ளார். இவைஅனைத்துமே அந்தரங்கம் படுக்கையறை காட்சிகள் அதிகம் நிறைந்தவை
இந்த ஓடிடி தளத்தில் வெப் சீரிஸ்கள் வெளியானது முதல் ஆபாச தொடர்கள் என அது சர்ச்சையில் சிக்கி உள்ளது.
இந்த தொடரில் பால்பாயாசம் தொடரின் நாயகி கதீஜா ஷெரீப் நடித்து இருந்தார். இது குறித்து அவர் ஆபாச தொடர்கள் எனதெரியவில்லை. படம் வெளியான பிறகுதான் படம் 18+ என்று தெரிந்தது. என்னால் மலப்புரத்தில் உள்ள வீட்டில் தங்க முடியவில்லை. என கூறி உள்ளார்.
லக்ஷ்மி தீப்தா இந்த படங்களில் அனைவரையும் ஏமாற்றி நடிக்க வைத்ததாகவும் தொடரில் அக்கா, தம்பி, மாமா, பாட்டி என நடித்தவர்கள் சாதாரண சீரியல் என்பதால் நடித்ததாகவும், ஆனால் படம் வெளியான பிறகுதான் அடல்ட் சீரிஸ் என்று தெரிய வந்ததாகவும் கூறி உள்ளனர்.
ஏற்கனவே லக்ஷ்மி தீப்தா மீது ஒரு பெண் கட்டாயபடுத்தி ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தியதாகவும், வேண்டாம் என்று கூறியும் தனது அந்தரங்க காட்சிகளை வெளியிட்டதாகவும் போலீசில் புகார் அளித்தார். போலி ஆவணம் தயாரித்து ஆபாச படத்தில் நடித்ததாக அந்த பெண் கூறியிருந்தார்.
ஆபாசமான படம் என்ற போர்வையில் லட்சுமி தீப்தா விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த் நிலையில் வெங்கனூரை சேர்ந்த 26 வயது வாலிபர், படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ஆபாச சீரியலில் நடிக்க வைத்ததாக புகார் போலீசில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் ஆபாச வெப் சீரிஸில் நடிக்க இளைஞரை மிரட்டியதாக, டைரக்டர் லட்சுமி தீப்தாவை அருவிக்கரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் நெடுமங்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அன்றைய தினமே அவருக்கு நிபந்தனைகளின் கீழ் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆறு வாரங்களுக்கு ஒவ்வொரு புதன் மற்றும் வியாழன் தோறும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு லட்சுமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.