< Back
சினிமா செய்திகள்
பிரபு தேவா படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

பிரபு தேவா படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
3 Feb 2023 10:39 PM IST

நடிகர் பிரபு தேவா நடித்துள்ள 'ஊல்ஃப்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் பிரபு தேவா தற்போது இயக்குனர் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் 'ஊல்ஃப்' (Wolf) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஞ்சு குரியன், லட்சுமி ராய், எம்.எஸ்.பாஸ்கர், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அம்பரீஷன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 65 நாட்களில் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்