தவழ்ந்து வரும் குட்டி கிருஷ்ணர்கள்: நயன்தாரா பகிர்ந்த புகைப்படம் வைரல்...!
|கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு எங்கள் வீட்டின் க்யூட் லிட்டில் கிருஷ்ணர்கள் என நயன்தாரா பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
சென்னை,
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த நயன்தாரா தனது இரு குழந்தைகளுடன் செம மாஸாக ஜெயிலர் பட பாடலுடன் ரீல்ஸ் வெளியிட்டு இருந்தார். அதன் பின்னர், அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் தான் இணைந்து நடித்த ஜவான் படத்தின் தமிழ் மற்றும் இந்தி ட்ரெய்லர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு புரோமொட் செய்திருந்தார்.
மேலும், நடிகர் ஷாருக்கானுடன் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. தனது கணவர் விக்னேஷ் சிவன், ஷாருக்கான் மற்றும் ஷாருக்கானின் மகள் சுகானா கானுடன் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தார் நயன்தாரா.
சமீபத்தில் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது இரு குழந்தைகளும் வாழை இலையில் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது உயிர் மட்டும் உலகம் பட்டு வேட்டி அணிந்து கொண்டு குட்டி கிருஷ்ணர்களாக அலங்கரிக்கப்பட்டு பூஜை அறைக்கு தவழ்ந்து செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை நயன்தாரா கூறியுள்ளார். எங்கள் வீட்டு கிருஷ்ணன்கள்... அத்தகைய ஒரு பாக்கியம் #கிருஷ்ணஜெயந்தி மிக அழகான, ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்களுடன்! என பதிவிட்டுள்ளார்.