< Back
சினிமா செய்திகள்
தனுசின் வடசென்னை 2-ம் பாகம் படம் வருமா?
சினிமா செய்திகள்

தனுசின் 'வடசென்னை' 2-ம் பாகம் படம் வருமா?

தினத்தந்தி
|
10 March 2023 7:13 AM IST

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்து வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்து இந்தியன்-2, ஜிகர்தண்டா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வர இருக்கின்றன. வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

'வடசென்னை 2' படம் வரும் என்று அறிவித்து பல மாதங்கள் ஆகியும் பட வேலைகளை தொடங்காமல் படத்தின் டைரக்டர் வெற்றி மாறனும், தனுசும் வேறு படங்களில் கவனம் செலுத்தி வருவதால் வடசென்னை 2-ம் பாகம் படம் கைவிடப்பட்டு விட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தனது இயக்கத்தில் தயாராகி உள்ள விடுதலை பட விழாவில் வெற்றிமாறன் பங்கேற்று பேசும்போது, "நான் இயக்கி உள்ள விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் ரிலீஸ் ஆன பிறகு சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்தை டைரக்டு செய்ய இருக்கிறேன். அந்த படம் முடிந்ததும் வடசென்னை 2-ம் பாகம் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவேன்'' என்று கூறியுள்ளார். இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்