< Back
சினிமா செய்திகள்
ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் வருமா? - டைரக்டர் செல்வராகவன்
சினிமா செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் வருமா? - டைரக்டர் செல்வராகவன்

தினத்தந்தி
|
16 Feb 2023 9:26 AM IST

ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் வருமா? என்ற கேள்விக்கு டைரக்டர் செல்வராகவன் அளித்துள்ள பேட்டியில் பதில் அளித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படம் 2010-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் தயாராகும் என்றும் அதில் தனுஷ் நடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பட வேலைகள் தொடங்கவில்லை.

இந்த நிலையில் சென்னையில் நடந்த 'பகாசுரன்' பட விழாவில் பங்கேற்ற செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் வருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து செல்வராகவன் கூறும்போது, "ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வரும்'' என்றார்.

மோகன் ஜி இயக்கி உள்ள 'பகாசுரன்' படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடித்துள்ளார். நட்டி, ராதாராவி, கே.ராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். செல்வராகவன் பேசும்போது, "திறமை இல்லாத யாரும் சாதாரணமாக ஜெயித்துவிடமுடியாது. மோகன் ஜி கடுமையான உழைப்பாளி, திறமைசாலி. சினிமா மீது மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருப்பவர்.

நான் இயக்குனராக இருக்கும்போது ஓடிக்கொண்டே இருப்பேன். யாரையும் கவனிக்க, திரும்பிப்பார்க்க நேரம் இருக்காது. ஆனால் இந்தப்படத்தில் நடிகராக இருக்கும்போது பெரிய டெக்னீஷியன்கள், கலைஞர்கள் சிறந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள்" என்றார்.

மேலும் செய்திகள்