காஞ்சனா பேய் படம் 4-ம் பாகம் வருமா?
|ராகவா லாரன்ஸ் நடித்த முனி பேய் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 2-ம் பாகம் மற்றும் 3-ம் பாகங்களை இயக்கி நடித்து இருந்தார். இந்த படங்களும் நல்ல வசூல் பார்த்தன.
இந்த நிலையில் காஞ்சனா படத்தின் 4-ம் பாகம் உருவாகுமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. காஞ்சனா 4-ம் பாகம் உருவாக வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து லாரன்சிடம் கேட்டபோது "தற்போது சில படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு காஞ்சனா 4-ம் பாகம் எடுப்பது குறித்து யோசிப்பேன்'' என்றார்.
லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வருகிறது. அடுத்து வெற்றி மாறன் தயாரிக்கும் அதிகாரம் படத்தில் நடிக்கிறார். பி.வாசு இயக்கத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 பட வேலைகளும் இறுதிகட்டத்தில் உள்ளது. லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படமொன்றிலும் நடிக்க இருக்கிறார்.