தலைவர் 171 : ரஜினி படத்துக்கு 'கழுகு' டைட்டில்?
|தலைவர் -171 படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினி பல ஆண்டுகளாக சினிமாவில் ஒரு வலிமையான அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். ரஜினிகாந்த் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் 'ஜெயிலர்' படத்தில் நடித்தார்.இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.
ரஜினிகாந்த் படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.
கமலுக்கு 'விக்ரம்' என்ற மெகா ஹிட் படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்து உள்ளார். அதேபோல இந்த படத்தையும் எடுக்க லோகேஷ் முடிவு செய்து உள்ளார்.ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர்கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
மேலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மேலும் ரஜினியின் கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு சூழப்பட்டிருந்தது.
அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது.
இந்நிலையில் தலைவர் -171 படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டுஅந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது