கல்கி 2898 ஏ.டி பட ரிலீஸ் தள்ளி போகிறதா?
|'கல்கி 2989 ஏ.டி.' அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
சென்னை,
பிரபாஸ் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கிறார்கள்.
அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், 'கல்கி 2989 ஏ.டி.' அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு ஜூன் 4-ந்தேதி வெளியாக இருப்பதால், பட ரிலீசை தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து படக்குழு யோசிக்கிறதாம். ஏற்கனவே பிரபாசின் 'சலார்' படமும் கிட்டத்தட்ட 4 மாதங்கள் தாமதமாகவே வெளியானது. இப்போது அவரது புதிய படமும் ரிலீசாக காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது.
'கல்கி 2989 ஏ.டி.' படத்தை முடித்த கையோடு 'சலார்-2' படத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கிறார்.