< Back
சினிமா செய்திகள்
அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் - சாய்பல்லவி
சினிமா செய்திகள்

அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் - சாய்பல்லவி

தினத்தந்தி
|
19 Aug 2022 6:09 PM IST

தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டா ஜோடியாக எந்த சூழ்நிலையிலும் நடிக்க மாட்டேன் என்று சாய்பல்லவி அறிவித்து உள்ளார்.

View this post on Instagram

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய்பல்லவி சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். படுக்கையறை, முத்த காட்சிகள் இருக்கும் படங்களில் நடிக்க மறுக்கிறார். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டா ஜோடியாக எந்த சூழ்நிலையிலும் நடிக்க மாட்டேன் என்று சாய்பல்லவி அறிவித்து உள்ளார். விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். எங்கு பார்த்தாலும் இவர் பெயர்தான் கேட்கிறது.

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராகும் லைகர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவருடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சாய்பல்லவி அதிர்ச்சி கொடுத்து இருப்பது பரபரப்பாகி உள்ளது. விஜய்தேவரகொண்டா நடித்து திரைக்கு வந்த டியர் காமரேட் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சாய்பல்லவியைத்தான் அணுகினர். ஆனால் அதில் முத்த காட்சிகள் இருந்ததால் நிராகரித்தார். விஜய் தேவரகொண்டா படங்களில் கவர்ச்சி காட்சிகள் அதிகம் இடம்பெறுவதால் அவருடன் எந்த படங்களிலும் நடிப்பது இல்லை என்று சாய்பல்லவி முடிவு செய்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்