சமந்தா நினைவு டாட்டூவை அழிக்க மனம் வரவில்லை- நாக சைதன்யா
|லால் சிங் சத்தா படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் நாக சைதன்யா அவர் கையில் உள்ள டாட்டூவை அழிக்காதது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த நாக சைதன்யா - சமந்தா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு சமந்தா சினிமாவில் படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 'புஷ்பா' படத்தில், 'ஓ சொல்றியா மாமா...' பாடலுக்கு அவரது வளைவு நெளிவான ஆட்டம் ரசிகர்களை கிறங்கடித்தது. இதைத் தொடர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்புகளும் அவரை தேடி வருகின்றன.
அதேவேளை நாக சைதன்யாவும் சினிமாவில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியில் அமீர்கானின் 'லால் சிங் சத்தா' படத்தில் நாக சைதன்யா ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.
நாக சைதன்யா கையின் மணிக்கட்டில் ஒரு டாட்டூ இருக்கிறது. அது அவரது திருமண தேதியை குறிப்பிடும் டாட்டூ ஆகும். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாக சைதன்யாவிடம், 'சமந்தா நினைவாக அந்த டாட்டூவை அழிக்காமல் வைத்திருக்கிறீர்களா?', எனக் கேட்கப்பட்டது. அதற்கு, "அந்த டாட்டூவை அழிக்கும் எண்ணம் இதுவரை எனக்கு வரவில்லை. எதையும் மாற்ற வேண்டாம். அந்த டாட்டூ அப்படியே இருப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை", என்று அவர் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து ஆனாலும் சமந்தா நினைவாக அந்த டாட்டூவை அழிக்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார், நாக சைதன்யா. அதேபோல நாக சைதன்யா நினைவாக அவரது செல்ல பெயரான 'சாய்' என்பதை சமந்தா தனது முதுகில் டாட்டூவாக குத்தி இருக்கிறார். அந்த டாட்டூவும் இன்று வரை அழியாமல் இருப்பதாக தகவல்.