சினிமாவை விட்டு ஹன்சிகா விலகலா?
|திருமணத்துக்கு பிறகு ஹன்சிகா சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவியது.
தமிழில் விஜய், சூர்யா, உதயநிதி, தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. தனது தொழில் பார்ட்னர் சோகைல் கதிரியாவை காதலித்து அடுத்த மாதம் (டிசம்பர்) திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். வலைத்தளத்தில் வருங்கால கணவரை ரசிகர்களுக்கு அறிமுகமும் செய்து வைத்துள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் திருமணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் திருமணத்துக்கு பிறகு ஹன்சிகா சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவியது. இது ஹன்சிகா ரசிகர்களை வருத்தப்படுத்தியது. இதற்கு ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார் அவர் கூறும்போது, ''ஒவ்வொரு தொழிலும் மதிப்பு மிக்கது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனவே திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். திருமணம் எந்தவொரு தொழிலுக்கும் தடையாக இருக்காது'' என்றார். தற்போது ஹன்சிகா 'பார்ட்னர்', 'ரவுடி பேபி', 'மை நேம் ஈஸ் ஷ்ருதி', '105', 'கார்டியன் உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார்.