< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'விரைவில் இணைகிறேன், அதுவரை கவனமாக இருங்கள்..' - குஷ்புவின் டுவிட்டர் பதிவு
|31 July 2023 5:45 AM IST
சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை குஷ்பு. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக குஷ்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நச்சுத்தன்மையை குறைக்க வேண்டி இருப்பதால் சிறிது காலம் விலகி செல்கிறேன். விரைவில் இணைகிறேன். அதுவரை கவனமாக இருங்கள், நன்றாக இருங்கள், நேர்மறையாக இருங்கள். அனைவரையும் நேசிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.