< Back
சினிமா செய்திகள்
மனைவி வழக்கு: வில்லன் நடிகருக்கு கோர்ட்டு நோட்டீஸ்
சினிமா செய்திகள்

மனைவி வழக்கு: வில்லன் நடிகருக்கு கோர்ட்டு நோட்டீஸ்

தினத்தந்தி
|
4 Feb 2023 8:47 AM IST

அலியா குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்படி வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக்குக்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். இந்தி திரையுலகில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். இவரது மனைவி அலியா. இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. சில தினங்களுக்கு முன்பு அலியா மீது நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெகருனிசா போலீசில் அளித்த புகாரின் பேரில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அலியா தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதாக புகாரில் தெரிவித்து இருந்தார். இதற்கு அலியா பதில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் தனக்கு உணவு கொடுக்காமலும், கழிவறைக்கு செல்ல விடாமலும் நவாசுதீன் சித்திக்கும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்துகின்றனர் என்று தெரிவித்து இருந்தார். அலியாவின் வக்கீலும் இதனை உறுதிப்படுத்தினார்.

தன்னையும் அலியாவை சந்திக்கவிடவில்லை என்று அவர் கூறினார். கணவன் வீட்டுக்கு சென்றவர் மீது அத்துமீறி நுழைந்ததாக வழக்கு தொடர்வது முறையல்ல என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் அலியா குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்படி நவாசுதீன் சித்திக்குக்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்