'நான் ஏன் அப்படி இருக்க வேண்டும்?...அவர் என் மகள் அல்ல' - ஜெயா பச்சன்
|ஐஸ்வர்யா ராய் பற்றி ஜெயா பச்சன் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் மீண்டும் வெளிவந்துள்ளது.
மும்பை,
தனது மருமகள் ஐஸ்வர்யா ராய் பற்றிய ஜெயா பச்சனின் வெளிப்படையான கருத்துகள் மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
பழைய நேர்காணலில் ஐஸ்வர்யா ராய் பற்றி ஜெயா பச்சன் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் மீண்டும் வெளிவந்துள்ளது. இதில், ஜெயா பச்சனிடம் திருமணத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா ராயிடம் நீங்கள் கண்டிப்பாக இருந்தீர்களா? என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து அவர் கூறுகையில்,
"கண்டிப்பாக இருக்க அவள் என் மகள் அல்ல, மருமகள். அவளிடம் நான் ஏன் கண்டிப்பாக இருக்க வேண்டும்?. அவருடைய அம்மா அவரிடம் கண்டிப்பாக இருந்திருப்பார் என்று நம்புகிறேன். மகளுக்கும் மருமகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது, உங்களுக்குத் தெரியும், என்றார்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் 2007-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சமீபகாலமாக ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் பிரிய உள்ளதாக இணையத்தில் வதந்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கது.