< Back
சினிமா செய்திகள்
கவர்ச்சிப் படங்களை வெளியிடுவது ஏன்? - மிர்னா மேனன் அளித்த கலகல பதில்
சினிமா செய்திகள்

கவர்ச்சிப் படங்களை வெளியிடுவது ஏன்? - மிர்னா மேனன் அளித்த கலகல பதில்

தினத்தந்தி
|
7 March 2024 11:38 AM IST

இன்ஸ்டாவில் கவர்ச்சியான, கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் மிர்னா மேனன்.

சென்னை,

ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து இருந்தவர் மிர்னா மேனன். கேரளாவை சேர்ந்த மிர்னா மேனன் பட்டதாரி எனும் படத்தின் மூலம் 2016ல் சினிமாவில் அதிதி மேனன் எனும் பெயரில் அறிமுகமானார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்த அவர், தனது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக் கொண்டார்.

மிர்னா `களவாணி மாப்பிள்ளை', `புர்கா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். `ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த மிர்னா மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான `பர்த் மார்க்' படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.

தற்போது தமிழ், மலையாளத்தில் பல படங்களில் நடித்து வரும் மிர்னா, அவ்வப்போது போட்டோ ஷூட்கள் நடத்தி தனது கவர்ச்சியான, கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்

மிர்ணாவின் அழகை பார்த்து மயங்கிய ரசிகர்கள் அவர் போஸ்ட் போட்டதுமே லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவிக்க தொடங்கி விடுகின்றனர். இன்ஸ்டாகிராமில் 11 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இந்தநிலையில், `தினத்தந்தி' நட்சத்திர பேட்டிக்கு அவர் அளித்த பதில் வருமாறு;-

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

நான் கம்ப்யூட்டர் என்ஜினீயர். ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் டெவலப்பராகவும் பணியாற்றி னேன். துபாய், கொச்சியில் வேலைப்பார்த்துள்ளேன்.

`ஜெயிலர்' படத்தில் நடிகர் ரஜிகாந்துடன் நடித்துள்ளீர்கள். எப்படி இருந்தது அந்த அனுபவம்?

என் கனவு நிஜமானது போல உணர்ந்தேன். ரஜினி சார் நடிக்கும்போதும், நடக்கும்போதும் ஒரு ஸ்டைல் இருக்கும். அதை வேறு யாரிடமும் பார்க்க முடியாது. அந்த ஸ்டைல் அவருடனேயே ஒட்டிப் பிறந்துள்ளது. அது எனக்கு பயங்கர ஆச்சரியமாக அமைந்தது.

காதல் காட்சிகளில் கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிக்க வேண்டியதிருந்தால்...

காதல் என்றாலே நெருக்கம் தானே... சில படங்களுக்கு நெருக்கமான காட்சிகள் தேவை தான். அப்படி கதைக்கு தேவைப்படும் காட்சிகள் என்றால் எதுவும் ஓ.கே.தான். ஆனால் அது என் எல்லைக்குட்பட்டதாக, கதைக்கு மிகவும் அவசியமானதாக இருக்கவேண்டும்.

எந்த விஷயத்தை கண்டு கோபம் வரும்?

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோரை 'பளார்' என அறை விட தோன்றும்.

நீங்கள் நடத்தும் கவர்ச்சி போட்டோ ஷூட்களின் பின்னணி என்னவோ?

நான் ஒரு வருடமாக ஜீரோ சுகரில் இருக்கிறேன். சீனி எடுத்துக்கொள்வது கிடையாது. இதனால் முகத்தில் தேவையற்ற சதைகள் குறைந்துபோகிறது. உடலிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் போட்டோ ஷூட் நடத்தி என் அழகை பார்த்துக் கொள்கிறேன். நம்மை அப்டேட் செய்துகொள்ளும் முயற்சி தான் போட்டோ ஷூட்.

`ஜெயிலர்-2' வரப்போகிறது என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்திவிட்டீர்களே...

அப்படியெல்லாம் இல்லைங்க... எல்லாருமே `வருது வருது' என்றார்கள். இது சம்பந்தமாக ஒருதடவை நெல்சன் சாரிடம் பேசும்போது, `ரைட்டிங் போய்கிட்டு இருக்கு...' என்று சொன்னார். அது `ஜெயிலர்-2' படமா? அல்லது வேறு ஏதாவது படமா? என்று சரியாகத் தெரியவில்லை. இதைத்தான் சொன்னேன். ஆனால் அது எப்படியோ போய் தலைப்புச் செய்தியாகி விட்டது. ஆனால் அது நடக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்