< Back
சினிமா செய்திகள்
திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?- மனம் திறந்த ஆண்ட்ரியா
சினிமா செய்திகள்

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?- மனம் திறந்த ஆண்ட்ரியா

தினத்தந்தி
|
28 Feb 2024 5:02 PM IST

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும், தனியாக வாழும் வாழ்க்கைக்கு பழகி விட்டதாகவும் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை ஆண்ட்ரியா. தமிழ், தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னணி பாடல்களும் பாடி இருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் ஐதராபாத்தில் திரைப்பட விழாவில் ஆண்ட்ரியா நிருபர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்களே ஏன்? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த ஆண்ட்ரியா கூறியதாவது:-

''எனக்கு 20 வயது, 25 வயது இருக்கும்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. ஏனோ அப்போது திருமணம் அமையவில்லை.

இப்போது எனக்கு 40 வயது ஆகிறது. இனிமேல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. திருமணம் செய்துகொள்ளவும் மாட்டேன். திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பேன்.

திருமணம் செய்துகொண்ட எத்தனையோ பேர் சந்தோஷமாகவா இருக்கிறார்கள். நான் இந்த வாழ்க்கைக்கு பழகி விட்டேன். எனவே இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை"

இவ்வாறு ஆண்ட்ரியா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்