அதிக படங்களில் நடிக்காதது ஏன்? - ஹிப் ஹாப் ஆதி
|இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இரண்டு வருடங்களாக அவரது படம் தியேட்டரில் வரவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது வீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி அளித்துள்ள பேட்டியில், "நான் அதிக படங்களில் நடிக்காததற்கு காரணம் உள்ளது. ஒரு படத்தில் ஒப்பந்தமான பிறகு அதன் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனகெடுவேன். இசையமைக்கும் வேலையும் இருக்கும். நட்பே துணை படத்துக்காக விளையாட்டு கற்றேன். வீரன் படத்தில் குதிரை இருப்பதால் குதிரை ஏற பயிற்சி எடுத்தேன். இரண்டு வருடம் கவுரவ டாக்டர் பட்டம் பெற படிக்கச் சென்றேன்.
இதனாலேயே அதிக படங்களில் நடிக்க முடியவில்லை தற்போது ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் நான் நடித்துள்ள வீரன் படம் உடலில் இருந்து மின் சக்தியை வெளிப்படுத்தும் மண் சார்ந்த சூப்பர் ஹீரோ கதை. குலசாமிகள் எல்லாமே சூப்பர் ஹீரோக்களாக இருந்தவர்கள்தான். ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் படத்தில் இருக்கும். வில்லனாக வினய் வருகிறார்'' என்றார்.