சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தாதது ஏன்? - ரசிகையின் கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்
|‘சென்னையில் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துவதில்லை?’ என்ற ரசிகையின் கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்.
சென்னை,
கடந்த 1992-ம் ஆண்டு 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், இன்று வரை இந்திய அளவில் முன்னனி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அண்மையில் மலேசியாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் அரங்கேறியது.
இதனைத் தொடர்ந்து புனேவில் இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், ரசிகை ஒருவர் 'சென்னையில் ஏன் இசை நிகழ்ச்சி நடத்துவதில்லை?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், சென்னையில் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி பெறுவது நீண்ட நடைமுறையாக இருப்பதாகவும், 6 மாதங்களாக அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Permissions,permissions,permissions 6months process ..✊ https://t.co/Lx2879U75B
— A.R.Rahman (@arrahman) February 8, 2023 ">Also Read: