< Back
சினிமா செய்திகள்
உடல் மெலிந்தது ஏன்? ரோபோ சங்கர் விளக்கம்
சினிமா செய்திகள்

உடல் மெலிந்தது ஏன்? ரோபோ சங்கர் விளக்கம்

தினத்தந்தி
|
13 Jun 2023 4:04 PM IST

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான ரோபோ சங்கர் சமீபத்தில் திடீரென்று உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போனார். அவரது உடல் மெலிந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி பலரும் பதறினார்கள். ரோபோ சங்கருக்கு என்ன ஆனது என்று விசாரிக்க தொடங்கினார்கள்.

இந்த நிலையில் உடல் மெலிந்த காரணம் குறித்து ரோபோ சங்கர் அளித்துள்ள பேட்டியில், ''நான் உடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்தேன். அப்போது எதிர்பாராமல் எனக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது.அந்த நோய் வந்த காரணத்தினால் எனது உடல் எடை வேகமாக குறைந்து விட்டது.

நல்ல வேளையாக எனக்கு சிறந்த மருத்துவர்கள் அமைந்தார்கள். எனது மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் நன்றாக என்னை பார்த்துகொண்டனர். அதனால் விரைவாக குணமடைந்தேன். நான்கு மாதமாக நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்து சிரித்து மனக்கஷ்டத்தை போக்கியதால் விரைவாக குணமடைய முடிந்தது.

எனது உடல்நிலை குறித்து யுடியூப்பில் தவறான தகவல்கள் வந்தன. அதை பார்த்து சிரித்துக்கொண்டேன்.'' என்றார்.

மேலும் செய்திகள்