< Back
சினிமா செய்திகள்
மார்பகங்கள் சிறியதாக உள்ளது...! நடிகை ராதிகா ஆப்தேவுக்கு ஏற்பட்ட அவமானம்
சினிமா செய்திகள்

மார்பகங்கள் சிறியதாக உள்ளது...! நடிகை ராதிகா ஆப்தேவுக்கு ஏற்பட்ட அவமானம்

தினத்தந்தி
|
14 April 2023 12:35 PM IST

தனக்கு பெரிய மார்பகம் இல்லை என்று சிலர் விமர்சித்ததாக நடிகை ராதிகா ஆப்தே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மும்பை

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.

இவர் தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த 'தோனி' படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து நடிகர் கார்த்திக் ஜோடியாக ஆல் இன் ஆல் அழகுராஜா நடித்தார் .இப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்துடன் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016ல் கபாலி படத்தில் நடித்தார்.இப்படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

திரைப்படங்களை விட வெப் சீரிஸ்களில் முக்கிய வேடங்களில் நடிக்க விரும்பும் ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு எதிரான விமர்சனங்கள் குறித்து வேதனையுடன் பகிர்ந்துள்ளார். ஒரு யூடியூப் சேனலுடனான உரையாடலில் அவர் கூறியதாவது:-

உணர்வுகள் விசித்திரமானவை. 'பத்லாபூர்' படம் வரைக்கும் நான் கிராமத்து பெண்ணாகத்தான் இருக்க முடியும் என்று மக்கள் நினைத்தார்கள்.

'பத்லாபூர்' படத்திற்குப் பிறகு, நான் செக்ஸ் காட்சிகள் மட்டுமே செய்ய முடியும், என்னால் ஆடைகளை குறைத்து தான் நடிக்க முடியும் என்று மக்கள் நினைத்தார்கள்.

மூக்கு சரியில்லை என்று சிலர் பட வாய்ப்புகளை தர மறுத்ததாகவும், சிலர் மார்பகம் சிறியதாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளனர். இன்று இந்த பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது.

நான் மூன்று அல்லது நான்கு கிலோ எடை அதிகமாக இருந்ததால் நிறைய பட வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறியுள்ளார். பெண்களை கேலி செய்பவர்கள் அதை தங்கள் உரிமை என நினைக்கிறார்கள் என்று ராதிகா ஆப்தே கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்