< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
முகத்தில் 'சர்ஜரி' செய்துகொண்டது ஏன்? சுருதிஹாசன் விளக்கம்
|16 Oct 2022 9:22 AM IST
முகத்தில் ‘சர்ஜரி' செய்துகொண்டது ஏன்? என்ற கேள்விக்கு நடிகை சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்கு வந்தவர் சுருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
சுருதிஹாசன் தனது முகத்தில் 'சர்ஜரி' செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. ஆனாலும் இது பற்றி அவர் எந்த கருத்தும் கூறாமலேயே இருந்து வந்தார். தற்போது அவர் மவுனம் கலைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
"நான் எனது மூக்கில் 'சர்ஜரி' செய்து கொண்டது உண்மைதான். எனது மூக்கில் ஒரு சமயம் பலத்த அடிபட்டு விட்டது. இதற்காக நான் சிகிச்சை மேற்கொண்டேன். அப்போது எனது மூக்கை அழகாக மாற்ற வேண்டும் என்பதால் 'சர்ஜரி' செய்து கொண்டேன்."
இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
சுருதிஹாசன் தெலுங்கில் 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.