நடிகராக மாறியது ஏன்? - கவுதம் மேனன் விளக்கம்
|நடிகராக மாறியதற்கான காரணம் குறித்து கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி டைரக்டராக இருக்கும் கவுதம் மேனன் சமீப காலமாக படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். குணசித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடிக்கிறார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்துள்ளது.
தற்போது விஜய்யின் லியோ படத்திலும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து பல வருடங்களாக முடங்கி உள்ள துருவ நட்சத்திரம் படத்தை பல தடைகளை தாண்டி திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்த நிலையில் நடிகராக மாறியதற்கான காரணம் குறித்து கவுதம் மேனன் கூறும்போது, "நான் விரும்பி நடிகனாகவில்லை. நடிப்பின் மீது உள்ள ஆர்வத்திலும் சினிமாவில் நடிக்கவில்லை. துருவ நட்சத்திரம் படத்திற்காகவே நடிகனாக மாறினேன்.
அந்தந்த படங்களில் நான் நடித்ததற்காக கிடைத்த சம்பளத்தை துருவ நட்சத்திரம் படத்தை உருவாக்கவும், ரிலீஸ் செய்யவும் பயன்படுத்தினேன். அதேபோல சினிமாவில் வாய்ப்புகள் கொடுக்கும்படி இதுவரை நான் யாரையும் கேட்கவில்லை. எத்தனையோ பட வாய்ப்புகளை நிராகரித்தும் இருக்கிறேன்" என்றார்.