மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி பி.கே. ரோஸி- கவுரவித்த கூகுள்
|மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி பி.கே.ரோஸி. இன்று பி.கே. ரோஸியின் 120வது பிறந்தநாள் அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சென்னை
பி.கே ரோஸி பிப்ரவரி 10, 1903 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ராஜம்மாவில் பிறந்தார். சிறுவயதிலேயே நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஜே.சி டேனியல் இயக்கிய விகதகுமாரன் (தி லாஸ்ட் சைல்ட்) படத்தில் மலையாள சினிமாவின் முதல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மலையாள திரைத்துறையில் முதல் கதாநாயகியாக நடித்தவர் பி.கே.ரோஸி.
இப்படத்தில் சரோஜினி என்ற நாயர் பெண்ணாக நடித்தார். திரைப்படத்தில், அவர் ஒரு உயர் சாதிப் பெண்ணாக நடித்தார்,
இந்த படத்தில் சரோஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அக்காலத்தில் கடும் எதிர்ப்புகளையும் சந்தித்தார். ஏனெனில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் பி.கே. ரோஸி (புலயா சமூகத்தைச் சேர்ந்தவள் (பட்டியலிடப்பட்ட சாதி). அக்காலத்தில் சாதிய ரீதியாக கடும் அடக்குமுறை இருந்ததால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண், நாயர் குடும்பப் பெண்ணாக நடிப்பதா? என கேரளத்தில் எதிர்ப்புகள் எழுந்தன.
எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல், இருந்த ரோஸி அதன் பிறகு நடிப்பதையே கைவிட்டார். அவர் கேசவ பிள்ளை என்ற லாரி ஓட்டுநரை திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.
அவரின் நினைவாக, பி.கே. ரோஸி பிலிம் சொசைட்டி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு மட்டுமே உரிய இடமாக இருந்த சினிமாத் துறையில் பெண்கள் இடம்பெறுவதை இந்த அமைப்பு உறுதி செய்கிறது. பெண்களால் நடத்தப்பட்டு வரும் இந்த அமைப்பு, பெண் படைப்பாளிகளையும், பெண் திரைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியைச் செய்து வருகிறது.
இன்று பி.கே. ரோஸியின் பிறந்தநாள். அதனால், அவரை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. '' மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி பி.கே.ரோஸியின் பிறந்தநாளில் அவரை கூகுள் டூடுல் கவுரவிக்கிறது'' என கூகுள் குறிப்பிட்டுள்ளது.