பத்திரிகையாளராக விருப்பம்...தற்போது அபிசேக், அக்சயுடன் நடித்த தேசிய விருது வென்ற நடிகை
|தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றவர் இவர்.
சென்னை,
மெர்சல், 24, காஞ்சனா 2, திருச்சிற்றம்பலம், உஸ்தாத் ஓட்டல் போன்ற தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றவர் நித்யா மேனன். இவர் நடிகையாவதற்கு முன்பு பத்திரிகையாளராக விரும்பி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம்
இது குறித்து அவர் ஒரு பேட்டியி கூறினார், அவர் கூறுகையில், "நான் பத்திரிகையாளராக விரும்பியபோது நான் சந்தித்த எதிர்ப்பை என்னால் நம்ப முடியவில்லை. என் குடும்பத்தினர் வந்து நான் ஏதோ தவறு செய்வதுபோல் எனக்கு அறிவுரை வழங்கியது நினைவிருக்கிறது. அவர்கள் மாற்றத்திற்கு மிகவும் பயப்படுகிறார்கள், என்றார்.
நடிகை நித்யா மேனன் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'மிஷன் மங்கள்' மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதில், அக்சய் குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் டாப்ஸி, வித்யா பாலன், சோனாக்சி சின்ஹா, கிர்த்தி குல்ஹாரி மற்றும் ஷர்மான் ஜோஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். அதனைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டு வெளியான பிரீத்: இன்டூ தி ஷேடோஸ் என்ற தொடரில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மிகவும் எதிர்பார்கப்பட்ட 54-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில், திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனன் சிறந்த நடிகைக்காக விருதை வென்றார். இது இவரது முதல் தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.