< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
"ஆன்மிகம் பக்கம் திரும்ப யார் காரணம்?" இளையராஜா விளக்கம்
|15 July 2022 4:32 PM IST
ஆன்மிகம் பக்கம் திரும்புவதற்கு யார் காரணம் என்பதை இளையராஜா விளக்கினார்.
இசையமைப்பாளர் இளையராஜா ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுடன் இருப்பவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். அவர் ஆன்மிகம் பக்கம் திரும்புவதற்கு யார் காரணம்? என்பதை விளக்கினார்.
"இசையில் என்னை விட திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சினிமாவுக்கு வரவில்லை. சினிமாவுக்கு வர அவர்கள் ஆசைப்படவில்லை. எதையும் நாம் தீர்மானிப்பதில்லை. இறைவன்தான் தீர்மானிக்கிறார்.
என் வாழ்க்கையில் நான் மூகாம்பிகை பக்தன் ஆனபின், எனக்குள் ஒரு தாக்கம் ஏற்பட்டது. பின்னர் ரமணரை என் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டேன்."
இவ்வாறு இளையராஜா கூறினார்.