< Back
சினிமா செய்திகள்
பிரபாசுக்கு ஜோடியாகும் பாகிஸ்தான் நடிகை?
சினிமா செய்திகள்

பிரபாசுக்கு ஜோடியாகும் பாகிஸ்தான் நடிகை?

தினத்தந்தி
|
23 July 2024 5:51 PM IST

பிரபாசுக்கு ஜோடியாக பாகிஸ்தான் நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் இந்திய அளவில் வெளியாகின்றன. சமீபத்தில், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிய 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் மேல் கடந்து வசூல் சாதனை செய்தது.

இதற்கு அடுத்ததாக, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபாசுடன், மாளவிகா மோகனன், நிதி அர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபாசின் அடுத்த படத்தில் கதாநாயகியாக பாகிஸ்தான் நடிகை சஜல் அலி நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சஜல் அலி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது மீண்டும் பாலிவுட்டில் நடிக்க வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்