< Back
சினிமா செய்திகள்
கமலின் அடுத்த பட இயக்குனர் இவரா? - ரசிகர்கள் உற்சாகம்
சினிமா செய்திகள்

கமலின் அடுத்த பட இயக்குனர் இவரா? - ரசிகர்கள் உற்சாகம்

தினத்தந்தி
|
4 Jun 2022 11:55 PM IST

விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'விக்ரம்'.இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புகளிடையே நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, கமல்ஹாசன், மலையாள இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் மகேஷ் நாராயணன் விஸ்பரூபம் 2 படத்தின் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்