< Back
சினிமா செய்திகள்
அரபிக் குத்து பாடலை பின்தள்ளி புதிய சாதனை படைத்த விசில் போடு
சினிமா செய்திகள்

அரபிக் குத்து பாடலை பின்தள்ளி புதிய சாதனை படைத்த விசில் போடு

தினத்தந்தி
|
16 April 2024 8:12 AM IST

அரபிக் குத்து பாடலை பின்தள்ளி விசில் போடு பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடலான விசில் போடு கடந்த 14-ம் தேதி வெளியானது. இந்த பாடலை விஜய் பாடியிருந்தார். பாடல் வெளியானதும் ரசிகர்கள் அதனை வைரலாக்கினர்.

மேலும், சிலர் நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு விசில் சின்னமாக இருக்கும் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விசில்போடு பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இப்பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது. முன்னதாக தென்னிந்திய சினிமாக்களில், வெளியாகி 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை கடந்த பாடலாக அரபிக் குத்து இருந்தது.

தற்போது அரபிக் குத்து பாடலை பின்தள்ளி கோட் படத்தின் விசில் போடு பாடல் குறைந்த நேரத்தில் அதிக பார்வைகளை பெற்றுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்